Header Ads



கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக பட்டம் பெற்ற அனாஸ்


(அஸ்ஹர் இப்றாஹிம்)


ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவானது கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


குறித்த பட்டமளிப்பு விழாவில் என்.ஜே.செரோன் அனாஸ் கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக தனது இளமானி பட்டத்தை பெற்றார்.  குறிப்பாக இத்துறையில்  கிழக்கு மாகாணத்தில் இளம் வயதில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த  முதன் நபராகவும் ,  சாய்ந்தமருது மண்ணின் முதலாவது கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராகவும் இளமானி பட்டத்தை நிறைவு செய்துள்ளார். 


இவர் நூறுல் ஜின்னா மற்றும் ஆமீனா உம்மா ஆகியோரின் புதல்வராவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிலும் கற்று 2018 ஆம் ஆண்டு ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 


தனது பல்கலைக்கழக நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் பல விருதுகளையும்  வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 குறிப்பாக 2021 ஆம் ஆண்டு அதி சிறந்த பல்கலைக்கழக மாணவருக்கான தேசிய  விருதையும் இவர்  பெற்றுள்ளார்

No comments

Powered by Blogger.