Header Ads



கருப்பு அக்டோபர், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்கு விடிவை தருமா?

- M.Mohamed -


டியூனிசியாவில் ஆட்சி மாற்றம் அங்கு ஒரு தனியாவரின் போராட்
டத்தினால் உருவாகியது.


தனிநபர் போராட்டம் சிறுக சிறுக மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து என் காரணமாக பெரும் போராட்டமாக மாறி அரபு வசந்தமாக மாறி துனீசியா லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது.


முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அந்தக் காலப்பகுதியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரட்சிகரமாக  மக்கள் முன் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்  அதனால் தாறுமாறாக தாக்கப்பட்டு மயங்கி விட்டார்கள்.


ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அவரும் தான் இஸ்லாத்தை ஏற்றதே புரட்சிகரமாக மக்கள் முன் தெரிவித்தார்கள் ஆனால் உங்களுடைய வீரத்தன்மையை அரபிகள் அறிந்திருந்த காரணமாக அவர்கள் பயந்து அவருக்கு எதுவும் செய்யவில்லை இந்தப் புரட்சியின் பின்னர் தான் முஸ்லிம்கள் ஓரளவுக்கு துணிவுடன் மக்காவுக்குள் நடமாட முடிந்தது.


உலகில் கைத்தொழில் புரட்சியை ஆடும் ஆட்சி மாற்றங்களுக்கான புரட்சியாகட்டும்  கம்யூனிச புரட்சியாகட்டும் எல்லாமே ஒரு சிலரால் ஏலனப்படுத்தப்பட்ட அதை வேலை அந்தப் புரட்சிகள் எல்லாம் பல்கிப் பெருகி மக்கள் ஆதரவு அதிகமாகி பெரும் போராட்டங்களாக மாறி மக்களுக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது.


இலங்கையை எடுத்துக் கொண்டாலும் இங்கும் பல்வேறு புரட்சிகள் இடம் பெற்றுள்ளன.


கடந்த ஆண்டு இடம்பெற்ற புரட்சி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது பலரும் கண்களால் கண்ட உண்மை.


1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் காத்தாங்குடி ஏராவூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.


இந்தப் பிரதேசங்களில் கை வைக்க முடியாது என அறிந்த இயக்கத்தினர் பாதுகாப்பு குறைவாக இருந்த பொலநறுவை  பிரதேசத்தில் படுகொலைகளை நிகழ்த்தி ஏறக்குறைய 150 முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர்..


இதை அடுத்து அக்டோபர் மாதத்திலும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஒரு படுகொலையை நிகழ்த்தி 190 கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர்.


இதனை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் இப் படுகொலைக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தனர்.


அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் கருப்பு அக்டோபர் நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.


இவற்றுக்கெல்லாம் ஆதரவாக இலங்கை முஸ்லிம்கள் சகல ஊர்களிலும் தமது கடைகளை அடைத்து ஹர்த்தால் அனுஷ்டித்தனர்.


இதன் காரணமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சர்வதேச மன்னிப்பு சபை சர்வதேச ஊடகங்கள் புலிகளை கடுமையாக சாடியதுடன் எச்சரிக்கையும் செய்திருந்தனர்.


புலிகள் நூற்றுக்கணக்கு முஸ்லிம்களை கொன்று குவித்தது இறுதியாக நடந்தது 1992 ஆம் ஆண்டு தான்.


கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் அவர்களுடைய இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தியது வரலாற்றை அலசி ஆராய்வு செய்பவர்களுக்கு தெரியும்.


2015 ஆம் ஆண்டு கூட யாழ்ப்பாணத்தில் வீடமைப்பு திட்டங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாத காரணமாக ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து புரட்சி செய்தனர்.


இதன் பிறகு தான் சுமார் 225 முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.


1744 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் நல்லூரில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் தமது பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர் என்பதை ஒல்லாந்தரின் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.


இந்தப் போராட்டம் காரணமாக ஏறக்குறைய நூறு ஆண்டுகள் அதனுடைய தாக்கம் இருந்தது.


எப்போது முஸ்லிம்கள் அந்தப் போராட்டத்தை கைவிட்டார்களோ அதன் காரணமாக அடுத்த தலைமுறைகளில் வந்தவர்களுக்கு தம்மை பாதுகாக்க திட்டம் வகுத்து செயற்பட தெரியவில்லை.


அப்படி தெரிந்து இருந்தால் புதிய தலைமுறைகள் தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணத்திலேயே குவித்து வைத்திருந்து 1990 இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் பொழுது பறிகொடுத்து இருக்க மாட்டார்கள்.


அவர்களின் செல்வத்தின் ஒரு பகுதியை ஏனைய மாவட்டங்களில் சரி சொத்துக்களாக வைத்திருந்திருப்பார்கள்.


பாலஸ்தீனத்தை பொருத்தவரையில் இந்த பலஸ்தீனத்தை கைப்பற்றும் திட்டம் ஓர் இரண்டு நாட்களில் தீட்டப்பட்டதல்ல. பல  ஆண்டுகளாக தீட்டப்பட்டு உடன்படிக்கையில் செய்யப்பட்டு அதற்குள் உருவாகியதுதான் இன்று உலக முஸ்லிம்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கி நடத்தும்  நாடாகும்.


அந்தப் பாலஸ்தீனர்களை பெருந்தொகையானால் இந்த போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வேறு நாடுகளில் சென்று குடியேறி தமக்கு என ஜோர்தான் என்ற பெயரில் ஒரு நாட்டையும் உருவாக்கி வாழ்ந்து வந்த காரணமாக காசா மேற்கு கரை பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பலம் இழந்து சிறு தொகையாகினர்.


மிகுதியாக இருந்த மக்களும் நமது காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகைக்கு விற்பனை செய்துவிட்டு எகிப்து உட்பட மேற்கு நாடுகளில் குடியேறினர்.


இன்று பலரும் புரியாமல் கதைப்பது போன்று அன்றும் பலஸ்தீனத்திலே யாழ்ப்பாணத்தில் மக்கள் எச்சரிக்கை இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து விட்டனர்.


அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நினைவுபடுத்துதல் என்பது பல்வேறு தாக்கங்களை சொந்த மக்களுக்கும் எதிரிகளுக்கும் ஏற்படுத்தக் கூடியது.


இன்று கருப்பு அக்டோபர் என்றால் அதனை தடுத்து நிறுத்த எத்தனையோ தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


முஸ்லிம்களை வெளியேற்றி அவர்களை செய்துவிட்ட மகா பெரிய தவறு அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து விட்டது ஒரு புறம் இருக்க முஸ்லிம்கள் தொடர்ந்து செய்து வரும் இந்த கருப்பு அக்டோபர் நினைவுபடுத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து அவர்களுக்கு நெற்றியடியை கொடுத்து வருகின்றது.


கருப்பு அக்டோபர் நினைவுகளை மீட்டுபவர்கள் அடுத்த தலைமுறைக்கு சில எச்சரிக்கை தகவல்களை சொல்லுகின்றனர்.


வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம் என்பது போல் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தற்போது இருந்தே எமது உம்மத்தை பாதுகாப்புடன் வாழ எச்சரிக்கையுடன் வாழ இந்த நினைவுபடுத்தல்கள் உதவும்.


யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு 2000 முஸ்லிம் குடும்பங்கள் மீளவும் குடி ஏறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள்.


சுமார் ஐந்து  வருடங்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்ட இவர்களுடைய மீள்குடியேற்றம் ஐந்து வருட முடிவில் எந்த ஒரு வீடும் அவர்களுக்கு வழங்கப்படாமல் சூழ்ச்சிகரமாக முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தடுக்கப்பட்டது..


பின்னர் நீதி கேட்டு முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்ததன் பின்னர்தான் 50 வீடுகள் வழங்கப்பட்டது.


வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் மூலமாக மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக மேலும் சில வீடுகள் காலத்துக்கு காலம் வழங்கப்பட்டு சுமார் 225 முஸ்லிம்களுக்கு இதுவரை வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு இழுத்தடிப்பு செய்வது ஒரு மனித உரிமை மீறலாகும்.


அதேபோன்று 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திரும்பவும் குடியேறுவதற்காக சுமார் 2000 முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர்.


அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் தொலைந்து விட்டது என கூறப்பட்டு 2016 ஆம் ஆண்டு  நடமாடும் சேவை என்ற பெயரில் இரண்டாவது தடவையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது

.


முக்கியமான ஆவணங்களை தொலைத்து விட்டோம் எனக் கூறும் அதிகாரிகளின் செயற்பாடுகள் மனித உரிமை மீறல் அல்லவா?


இந்த விடயம் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.


2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் பொழுது ஏறக்குறைய 3000 குடும்பங்கள் திரும்ப குடியேறுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.


ஆனால் அவர்களில் யாருக்கும் இதுவரை வீடுகள் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்படவில்லை.


மேலும் 2017 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் யாழ்ப்பாணம் முஸ்லிம்களை குடி ஏற்றுவதற்கு சுமார் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.


இந்தத் தொகை ஒரு குடும்பத்துக்கு தலா எட்டு லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் சுமார் 200 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆகும்.


இந்த நிதியை சுமார் எட்டு மாதங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒழித்து வைத்துவிட்டு இந்த நிதியை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் இல்லாத காரணமாக அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக அப்போதைய அமைச்சர் ரிசாத் அவர்கள் 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மீளாத் விழா நிகழ்வுகளின் போது மேடையில் வைத்து தெரிவித்திருந்தார்.


எனவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்வதன் ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தெரிவிக்கப்பட வேண்டும்.


எனவே கருப்பு அக்டோபர்  நினைவுகள் பல  தசாப்தங்களுக்கு நடத்தப்பட வேண்டும்.


நீங்கள் அதனூடாக எதிர்கால சந்ததிகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்து தம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் வியூகங்கள் போன்றவற்றை வகுத்து தமது பொருளாதார இழப்புகளை குறைத்துக் கொள்ள வழி சமைக்கப்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.