Header Ads



புதிதாக ஜுமுஆ ஆரம்பிப்பது தொடர்பான புதிய பொறிமுறை


புதிதாக ஜுமுஆ ஆரம்பிப்பது தொடர்பில் மார்க்க  மற்றும் நிர்வாக ரீதியான அனுமதியை வழங்குவது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் இலங்கை வக்பு சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.எம்.எச்.எம். முஹிதீன் ஹுஸைன் மற்றும் அதன் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி,  நிறைவேற்றுக் குழு மற்றும் ஃபத்வா குழு உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில்  ஜுமுஆப் ஆரம்பிப்பது தொடர்பில் உரிய பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக ஓரிடத்தில் ஜுமுஆ ஆரம்பிப்பதற்கான உரிய களஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிபாரிசு வழங்குவதற்கு உத்தியோகபூர்வ குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. 


மேலும் குறித்த குழுவே நாடளாவிய ரீதியில் புதிதாக ஜுமுஆக்களை ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் என தீர்மானிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.