நுட்பமாக மிரட்டி, கொள்ளையடிக்கும் பெண் - வைத்தியருக்கே இந்த நிலையா..?
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த மருத்துவர் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக பெண் ஒருவரும் அதை அகற்ற முன்வந்தார். குறித்த பெண், பேஸ்புக்கில் இருந்து பதிவை நீக்க வைத்தியரிடம் பணம் கேட்டுள்ளார்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த வைத்தியர், தவணை முறையில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.
அதற்கமைய, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது வைத்தியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிலும் வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.
வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபுக்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக சமூகத்தில் காணப்பட்டுள்ளார். அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவு ஒன்றையும் காண்பித்துள்ளார்.
அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும், அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார். ஆனால், அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணிடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில், தான் நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளராக கடமையாற்றவில்லை எனவும், பயிற்சிக்காக மாத்திரமே அங்கு சென்றதாகவும், நிரந்தர ஊழியராக தான் நியமனம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பணம் கொடுத்துதான் அந்த வேலைக்குச் செல்ல முயன்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் மொழிப் பெயர்ப்பாளராக வேலை செய்வதாக தெரிவித்து காண்பிக்கப்பட்ட அடையாள அட்டை போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment