Header Ads



மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை


மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை இன்று -07- அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


புதிய திட்ட மோட்டார் வாகன வருவாய் உரிமங்களை ஒன்லைன் முறை மூலம் வீட்டில் இருந்தபடியே பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


“மக்கள் மாகாண பிரதேச செயலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நாட்டில் எங்கிருந்தும் தமது வருமான உரிமங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.


எனினும், இந்த திட்டத்தை அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒன்லைன் முறை மூலம் 100 சதவீதம் பணம் செலுத்தவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.