இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் தாக்குதல் - சகல ஆயுதக் குழுக்களையும் போராட்டத்தில் இணைய ஹமாஸ் அழைப்பு
லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ் வடக்கு இஸ்ரேலில் மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
தெற்கு லெபனான் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பதில் பீரங்கித தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மூன்று பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், லெபனான் பிரதேசத்தில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஷெபா பண்ணைகளில் இஸ்ரேலிய இராணுவ நிலைகளை அதிகாலையில் தாக்கியதாகக் கூறியது.
லெபனானில் உள்ள அனைத்து ஆயுதக் குழுக்களையும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் லெபனானில் கூட்டாளிகளைக் கொண்டுள்ளது…
Post a Comment