மொட்டுவில் இருந்து பல்டி அடித்தவர்களுக்கு சிக்கல் இல்லையா..?
சுற்றாடல் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட்டுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என சுதந்திர மக்கள் சபையின் நிறைவேற்று உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு முன்னர், பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்தி மக்களின் ஆணையின் பிரகாரம் செயற்படவேண்டுமென மேலெழும்பும் மக்கள் எதிர்ப்புச் சிந்தனையை அடக்குவதற்காக அரசாங்கம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்துள்து என்றும் அவர் கூறினார்.
Post a Comment