Header Ads



சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வட்ஸப்பில் விற்பனை - நீதமன்றத்திற்கு வந்த விவகாரம்



இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.


சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் பணியகம் நேற்று தெரிவித்துள்ளது.


இலங்கையர்கள் பலர் வட்ஸ்அப் குழுவில் அங்கம் வகித்து சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வருவதாக பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


2, 3, 5 மற்றும் 7வயதுக்குட்பட்ட சிறுவன் மற்று சிறுமிகளின் பாலியல் மற்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் 1000, 2000 மற்றும் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களால் ஆபாசமான காணொளிகளை பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைக்கு தேவையான பல உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பணியகம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.