Header Ads



பிடிக்கப்படும் மீன்களை கூலித்தொழிலாளிகளின் வீட்டுக்கே, கொண்டுபோய் இலவசமாக கொடுக்கும் பரோபகாரி


(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை,சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவில் கரைவலை மீனவர்களால் மீன்கள் பிடிக்கப்படுவதால் பிரதேசமெங்கும் கடல் மீன்கள் மிகவும் மலிவான விலைக்கு விற்கப்படுகின்றன.


இந்த விலைக்கும் கூட மீனை வாங்கி சமைத்து உட்கொள்ள முடியாமல் வறுமை நிலையிலுள்ள நாளாந்த கூலி வேலை செய்து தமது ஜீவனோபாயத்தை கடத்தும் அம்பாறை மாவட்டதின் மிகவும் கஷ்டமான பிரதேசமான வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில் புரம் ஆகியவற்றில் வாழும் தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு கல்முனையைச் சேர்ந்த பரோபகாரியொருவர் மீன்களை கொள்வனவு செய்து தனது டிப்பர் வாகனத்தில் ஏழை மக்களின் காலடிக்கு சென்று இலவசமாக வழங்கி வருகின்றார். 


இம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்தும் மாளிகைக்காடு மீன் சந்தைக்கு பலர் வருகை தருகின்றனர்.


கீரி மீன் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்து கருவாடாக்குவதில் கூடிய ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

மழைகாலமாக இருப்பதால் வெயிலைவிட விறகு பயன்படுத்தி மீனை கருவாடாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

No comments

Powered by Blogger.