Header Ads



தாயை தாக்கிய மகனை, அடித்துக் கொலை செய்த தந்தை


வெல்லவ பிரதேசத்தில் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நேற்று இரவு 8.30 மணியளவில் வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


41 வயதான சுமேத ஹேமந்த குமார என்பவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


குறித்த நபரை 75 வயதுடைய தந்தையும் 43 வயதுடைய சகோதரரும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது தாயை தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.