Header Ads



அமைச்சர் நசீரின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது


முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திங்கட்கிழமை (9)  அறிவித்துள்ளார்.


இதனால் வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பட்டியலில் அடுத்த வேட்பாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட உள்ளார்.


நசீர் அஹமட்டுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஆவார்.


புதிய பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்னும் இரு தினங்களுக்கு  வெளியிடப்பட உள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து  நசீர் அஹமட் நீக்கப்பட்டது, சரியென உயர்   நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி   தீர்ப்பளித்திருந்தது.

1 comment:

  1. கிழக்கிலும் வடக்கு நாட்டின் ஏனைய எல்லாப் பகுதிகளிலும் நீதியையும் நியாயத்தையும் விரும்பும் இலங்கையர்கள் கூட்டாக கொண்டாட வேண்டிய தருணம் இது. ஆனால் எமது உறவுகள் காஸாவில் படுகொலை செய்தும் அவர்கள் அநியாயமாக துன்பத்துக்கு உள்ளாகியுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்காக நாம் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் கொண்டாட்டங்களைத் தவிர்ந்து கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.