பல தகவல்கள் என்னை வந்து சேர்ந்திருக்கின்றன - மனோ
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்று கூறப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருந்த அசாத் மௌலானா சனல் 4இற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத்தான் அதிகமாக பேசப்படுகின்றது.
அதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தரப்பின் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் மூன்றாம் தரப்பு மூலமாக என்னை வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் மனோ கணேசன் கூறினார்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொல்லப்பட்டது எப்படி, அவரை கொலை செய்யுமாறு உடனடியாக ஆணையிட்டவர் யார்? இறுதி உத்தரவு யாரிடம் இருந்து வந்தது என்ற தகவல்கள் எல்லாம் என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. உரிய தருணத்தில், சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தகவல்களை நான் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment