காத்தான்குடியில் வடமாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு தின நிகழ்வு
(எம்.பஹ்த் ஜுனைட்)
1990 ஒக்டோபர் 29 இல் புலிகளால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு 33 வருட நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி , அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது .
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பின் செயலாளர் சட்டமானி பி.எம்.முஜீபுர்ரஹ்மான் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டு வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினார்கள்.
இந் நிகழ்வின் போது 1990 இல் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடிப்படை உதவிகள் வழங்கிய புத்தளம் மாவட்ட மக்களை கெளரவித்து புத்தள மாவட்ட மக்கள் சார்பில் மெளலவி எம்.பீ.எம். ஷிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment