ரயில் வரும் வரை கதிரையில் அமர்ந்திருந்தவர் மரணம்
- ரஞ்சித் ராஜபக்ஷ -
ரயிலில் பயணிக்க வந்த பயணி அமர்ந்து அமரராகிய சம்பவமொன்று ஹட்டன் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, நல்லத்தண்ணி முல்லுகாமம் கீழ் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பி.எஸ். ஆறுமுகம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில் வரும் வரையில் பயணிகள் ஓய்வெடுக்கும் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸ் தெரிவித்தனர்.
அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment