மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நிகழ்ந்த சம்பவம்
- ரீஎல் ஜவ்பர்கான் -
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று காலை(10) பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று நகரில் நகரில் அமைந்துள்ள ஹாட்வெயார் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்ததால் கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் காருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பெயிண்ட் கம்பெனி ஒன்றின்(அரடவலடரஉம) விற்பனை பிரதிநிதிக்குச் சொந்தமான கார் ஒன்றே குறித்த கடைக்கு முன்னால் உள்ள யூ வளைவில் திரும்ப முற்பட்டபோது வாகனத்தின் உதிரிப்பாகமொன்று உடைந்ததன் காரணமாக வாகனத்தை நிறுத்த முடியாமல் கடைக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடையின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளதுடன் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment