Header Ads



பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள அரபுக் கல்­லூரி மாண­வர்கள் - ஏன் இந்த அநீதி..?


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


பரீட்சைத் திணைக்­களம் வரு­டாந்தம் நடத்தி வந்த அல்­ஆலிம் பரீட்சை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு நிறுத்­தப்­பட்டுவிட்­டதால் அரபுக் கல்­லூரி மாண­வர்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.


குறிப்­பிட்ட அல்­ஆலிம் பரீட்சை இறு­தி­யாக 2018ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­டது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டதன் பின்பு, தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களில் பலர் அல்­ஆலிம் பட்டம் பெற்­ற­வர்கள் எனக் கண்­ட­றிந்த அர­சாங்கம் அப்­ப­ரீட்­சையை நடத்­தா­ம­லி­ருக்க தீர்­மா­னித்­த­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.


2019 முதல் இன்று வரை அல்­ஆலிம் பரீட்சை நடத்­தப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு அல்­ஆலிம் பரீட்­சைக்கு பயிலும் மாண­வர்­க­ளுக்கு ஒழுங்­கான பாடத் திட்டம் அமுலில் இல்லை என்றே காரணம் கூறப்­பட்டு வந்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இந்தக் கார­ணத்­தையே தெரி­வித்­துள்­ளனர்.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் பாது­காப்பு தரப்­பினர் ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யா­டல்கள், பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு கூட்­டங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் கல்­வி­மான்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எடுத்துக் கூறியும் உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.


இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் கல்விப் பிரிவு செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நாளிமை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.


‘கல்வி அமைச்சு மற்றும் பரீ­ட்சை திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பல கட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தியும் இது­வரை அல்­ஆலிம் பரீட்­சைக்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கல்வி அமைச்­சினால் சமய ஆலோ­சனை சபையின் கூட்­ட­மொன்று அண்­மையில் நடை­பெற்­றது. அந்தக் கூட்­டத்­திலும் பரீட்­சைக்­கான பாடத் திட்டம் தொடர்பில் வின­வப்­பட்­டது. அல்­ஆலிம் பரீட்­சைக்­கான பாடத்­திட்டம் சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கு ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்டு விட்­ட­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தெரி­வித்தார். இக்­கூட்­டத்தில் சமய ஆலோ­சனை சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டார்கள்.


கல்வி அமைச்­சரின் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் அல்­ஆலிம் பரீட்சை நடத்­து­வது பற்­றிய தீர்­மா­னத்தை விரைவில் அறி­விப்­ப­தாக அதி­கா­ரி­க­ளினால் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை எது­வித பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை.


தற்­போது ஐந்து வருட கால­மாக அல்­ஆலிம் பரீட்­சையை நடத்­தாது நிறுத்தி வைத்­தி­ருப்­பது மாண­வர்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றார்.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


திணைக்­கள பணிப்­பாளர்


இஸ்லாம் மதத்­துக்கு மாத்­தி­ரமே இலங்­கையில் வரு­டாந்தம் மூன்று பரீட்­சைகள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் ஏனைய மதங்­க­ளுக்கு வரு­டாந்தம் இரண்டு பரீட்­சை­களே நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் ஏனைய மதங்­க­ளுக்கு வரு­டாந்தம் இரண்டு பரீட்­சை­களே நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் விளக்­க­ம­ளித்த கல்வி அமைச்சு அத­னா­லேயே அல்­ஆலிம் பரீட்­சையை நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தெரி­வித்தார்.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் திணைக்­கள பணிப்­பாளர் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்,


இஸ்லாம் தொடர்­பான 3 பரீட்­சைகள் வரு­டாந்தம் நடத்­தப்­பட்டு வந்­தன. அஹ­திய்யா பரீட்சை, தர்­ம­சா­ரியா பரீட்சை மற்றும் அல்­ஆலிம் பரீட்சை என்­ப­னவே அவை. அண்­மையில் நடை­பெற்ற சமய ஆலோ­சனை சபை கூட்­டத்தில் இவ்­வி­வரங்கள் தெரி­விக்­கப்­பட்­டன.


ஒரு பரீட்­சையை நிறுத்தி விட்டு அல்­ஆலிம் பரீட்­சையை நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யும்­படி நாங்கள் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்­கள அதி­கா­ரி­க­ளையும் அமைச்­ச­ர­வையும் கோரினோம். எமது கோரிக்கை கொள்­கை­ய­ளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli

No comments

Powered by Blogger.