திலித் தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சியின் தேசிய தலைமையகம் கொழும்பில் திறப்பு
தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சியின் தேசிய தலைமையகம் இன்று (11) முற்பகல் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.
'புதிய சிந்தனையுடன் முன்னோக்கி செல்வோம்' எனும் தொனிப்பொருளில் இன்று திறந்து வைக்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகம் கொழும்பு 08, பூங்கா மாவத்தையில் அமைந்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹேமகுமார நாணயக்கார, முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத், அரசியல் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஓய்வுபெற்ற அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் அதன் ஸ்தாபகரும் தற்போதைய சிரேஷ்ட தலைவருமான ஹேமகுமார நாணயக்கார ஆகியோரின் தலைமையில் புதிய கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
Post a Comment