தங்கப் பொருள்கள் அடங்கிய பல பெட்டகங்கள், கொழும்பு நீதிமன்றத்தின் நிலக்கீழ் களஞ்சியசாலைக்குள் புகுந்த திருடர்கள்
இந்த நிலக்கீழ் களஞ்சியசாலையை திருடர்கள் கடந்த 6ஆம் திகதி உடைத்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் பிரதான பதிவாளர் வாழைத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை (17) இந்தக் களஞ்சியசாலைக்குள் புகுந்த திருடர்கள், கதவுக்கு உள்ளேயும் வெளியேயும் போடப்பட்டிருந்த நான்கு பூட்டுகளையும் உடைத்து, கதவு திறக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலக்கீழ் பெட்டிக் கிடங்கில் பழைய வழக்குகள் தொடர்பான வழக்குப் பொருட்கள், தங்கப் பொருள்கள் அடங்கிய பல பெட்டகங்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டார்.
மிகவும் பழைய வழக்குக் கோப்புகளைக் கொண்ட இந்தக் கிடங்கில் உள்ள வழக்குகள், பொருட்கள் மற்றும் புத்தகங்கள் தொடர்பாக குறிப்பாக ஆவணப்படுத்தப்படவில்லை என்று நீதித்துறை அதிகாரி மேலும் கூறினார்.
Post a Comment