இலங்கையில் பிரபல தொழிலதிபர் மரணம்
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் முன்னணி கோடிஸ்வரர்களில் ஒருவரான இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்தவர் ஆவார்.
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர், செலான் வங்கியின் ஸ்தாபகரும் ஆவார்.
Post a Comment