நஸீருக்கு எதிரான தீர்ப்பு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், நசீர் அஹமட்டிற்கு அனுப்பிய கடிதத்தை சவாலுக்குட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று -06- நிராகரிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை, சரியானதும் சட்டபூர்வமானதுமான தீர்மானம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த 25 வருடங்களாக கட்சி மாறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தான் பெற்று வந்திருக்கிறார்கள். ஆகையால், இது அதற்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது என M.A.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
Post a Comment