Header Ads



தேவாலய மண்டபத்தை உடைத்து, பெறுமதியான குத்து விளக்குகள் திருட்டு


- ரீ.எல் ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிலுள்ள  ஆரையம்பதி பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மண்டபத்தை உடைத்து அங்கிருந்த இரண்டு பெறுமதியான உலோக குத்துவிளக்குகள் திருடப்பட்டுள்ளன.


 குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட திருடன் தப்பிச் சென்றுள்ள போதிலும் குத்து விளக்குகளை காத்தான்குடி பொலிசார் இன்று காலை(8) மீட்டுள்ள்ளதாக  காத்தான்குடி பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்.


ஆரைம்பதி பிரதான வீதியில் உள்ள தூய குழந்தை திரேசா ஆலயத்தின் மண்டபத்தை கடந்த 3ம் திகதி உடைத்து அங்கிருந்த இரண்டு பெறுமதியான குத்து விளக்குகளை திருடி சென்ற நபர் தப்பியோயுள்ள நிலையில் குறித்த குத்துவிளக்குகளை ஆரையம்பதி கர்பலா பிரதேசத்தில் உள்ள பற்றைக் காட்டுக்குள் இருந்து பொலிசார் மீட்டெடுத்துள்ளனர்.


சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த குத்து விளக்குகளை திருடிய நபர் தப்பியோடிள்ள நிலையில் பொலிசார் அவரை தேடி வருகின்றனர். மண்டபத்தின் முன் கதவை உடைத்தே திருடன் குறித்த குத்து விளக்குகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.