Header Ads



அருகே அமர மறுத்த சந்திரிக்கா


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இலங்கையின் சீனத் தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


குறித்த நால்வருக்கும் ஒரே மேசையில் அமர்வதற்கான நான்கு ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தான் கோத்தாபய அருகில் அமர்வதை விரும்பாது அருகிலுள்ள மேசையை தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்ஹொங் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் மிக முக்கிய பிரமுர்கள் வரிசையில் இந்த நால்வரே பிரதானமாக இடம்பிடித்திருந்தனர்.


சீனத் தூதுவர் இந்த நால்வரின் ஆசனங்கள் குறித்து அதிக சிரத்தை எடுத்ததாகத் தெரிகின்றது. எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அருகில் கோட்டபாயவின் ஆசனம் இருந்ததால் சந்திரிகா அவர் அருகில் அமர்வதை விரும்பியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


கோட்டாபய ஜனாதிபதியாவதை ஆரம்பத்திலிருந்து சந்திரிக்கா எதிர்த்து வந்தார்.. அவர் இடையில் நாட்டை விட்டு வெளியேறியவுடன் ஜனாதிபதி பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தியவர் என சந்திரிகா ஒரு சந்தர்ப்பத்தில் கோட்டாபயவை விமர்சித்திருந்தார்.


கூறப்போனால், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரி, கோட்டாபய ஆகிய மூவர் மீதும் சந்திரிகா வெறுப்புடனேயே இருக்கின்றார். எனவே, அன்றைய நிகழ்வில் இந்த மூன்று பேருடனும் அமர்வதற்கு அவர் விரும்பியிருக்கவில்லையென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. நமது பரிபாஷையில் இது ஓர் 'ஈமானிய உணர்வு'.

    ReplyDelete

Powered by Blogger.