வரலாறு காணாத கொலைக்களம்
- யாழ் அஸீம் -
நாய்களாய் அலைந்த
நாடோடி சமூகமே!
சபிக்கப்பட்ட
சாத்தானியக் கூட்டமே!
அடைக்கலம் தந்த
அப்பாவி உயிர்களின்
இரத்தத்தைக் குடிக்கும்
இஸ்ரேலியக் காட்டேறியே!
இத்தனை உயிர்களை
இரையாக்கி ஏப்பமிட்டும்
இன்னும் அடங்கவில்லை-உன்
இரத்த தாகம்!
மண்ணின் மைந்தரை
வந்தேறு குடிகள்
துவம்சம் செய்யும்
வரலாறு காணாத
கொலைக்களமிது!
மனிதமிருகம் இடித்த
மருத்துவ மனையில்
சிதறிய தலைகளைக்
கட்டியழும் சோதர்ர்..
கல்விக் கூடங்களில்
கால்வேறு கைவேறாய்
சிதறிய செல்வங்களை..
குருதியில் நனைந்த
மழலைக் குஞ்சுகளை
மடியிலிட்டுக் கதறும்
மாதர்களின் ஓலங்கள்..
கசிந்திடும் விழிகளுடன்
கனத்திடும் நெஞ்சுடன்
இஸ்லாமிய உம்மத்!
பாலகர்..பெண்கள்
வயோதிபர்..நோயாளிகள்
இவர்கள்தான் பயங்கரவாதிகள்
இஸ்ரேலிய அரக்கர்களுக்கு!
பாடசாலைகள்..பள்ளிவாசல்கள்
பல்கலைக்கழகங்கள்
மருத்துவமனைகள்
இவைகள்தான்
பயங்கரவாதிகளின் முகாம்கள்
இஸ்ரேலியக் கபோதிகளுக்கு!
காஸா மக்களின்
சதைகளைத் தின்று..
இரத்தத்தை ஓட்டும்
கொலைவெறி கண்டும்
கைகட்டி நிற்கிறது
(அ)நாகரிக உலகம்
அரபுலக அடிமைகள்
ஊமைகளாய் மௌனிக்க.
வெள்ளை மாளிகையின்
கறுப்பு உள்ளங்கள்
செங்கம்பளம் விரிக்க
அரங்கேறும் அராஜகம்
அனைத்துலக பயங்கரவாதம்
சர்வதேச மனித உரிமை மீறல்!
வரலாறு காணாத
வன்முறை கண்டும்
மனித உரிமை பற்றி
மார்தட்டி ஓலமிடும்
மேற்குலக நாடுகள்
நாவசைக்க மறுக்கிறது!
பயங்கரவாத்த்துக்கு
இலக்கணம் வகுத்தோர்
இஸ்ரேலியக் கொலைவெறிக்கு
என்ன பெயர் வைத்தனரோ?
காஸா மண்ணில்
எரிகின்ற நெருப்பை
அணைத்திடத் தயங்கும்
மானிட நேசர்களே
மனம் உரிமை ஆர்வலரே!
ஐக்கியப்படுத்தும்
நாடுகளின் சபையே!
பயங்கரவாதம் பேசிய-உங்கள்
முகங்கள் எங்கே?
இனவெறி தெறிக்கும்
கொடூர விழிகளுடன்
பலஸ்தீன் இரத்தம்
வழிந்தோடும் பற்களுடன்
உஙகள் நிஜமான முகங்கள்
இப்போதன்றோ நிதர்சனமாகிறது
அமெரிக்கக் கயிற்றிலாடும்
மேற்குலக நாடுகளே!
எக்காலமும் நிலைக்காது
உங கள் பொம்மலாட்டம்!
எல்லைகள் கடந்த
ஈமானியப் பிணப்பால்
இணைக்கப்பட்ட
இஸ்லாமிய உம்மத்துக்காய்
ஏந்துகின்ற எங்கள் கரங்கள்
இறைவனையே நோக்கியெழும்
எங்கள் பிரார்த்தனையில்
பாலஸதீன் கொடி உயரம்!
எங்கள் கண்ணீர்
காஸாவின் தீயை அணைக்கும்!
எங்கள் நோன்பு
எமக்கு கேடயமாய் அமையும்!
எங்கள் தர்மம்
எதிரியின் படையை அழிக்கும்!
புண்ணிய பூமிக்காய்-எங்கள்
இருகரம் ஏந்துவோம்
கண்ணீர் சிந்துவோம்
Post a Comment