பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ள கெமுனு விஜேரத்ன
LTTE மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புகளே தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாக டெய்லி மிரருக்கு அவர் பிரத்தியேகமாக தெரிவித்தார்.
பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியினால் நடத்தப்படுகின்றன எனவும், தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலே இதனைக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
”தம்மை சார்ந்து இருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் சேகரிக்கும் பணத்தை உள்ளூர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வழங்குவது நாட்டுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் புலிகளாலும், ISIS அமைப்பினராலும் முறியடிக்கப்படுவதால், இவை விசாரிக்கப்படுவதில்லை.
அதனால்தான் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உத்தேச சட்டத்திற்கு பெரும் ஆட்சேபனை உள்ளது. இது விடுதலைப் புலிகளின் போருக்குப் பின்னர் நாடு எதிர்கொண்ட விளைவு, மக்களைக் கொன்று எந்தப் போரையும் தோற்கடிக்க முடியாது." விஜேரத்ன தெரிவித்தார்.
மேலும், யாரேனும் வாய்ப்பு அளித்தால் அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன் என்றார்.
கலர் காட்டி பெரியாள் ஆகும் முயற்சி நாடகத்தின் ஒரு கட்டம். பஸ் முதலாளியான இவர் ஆராய்ச்சி வேறு செயதிருக்கின்றார். இது போன்ற கேஸ்கள் நாட்டில் தற் போது போதியளவு காணப்படுகின்றன. செய்திகளை குப்பைக்கூடையில் தள்ளிவிட்டால் அனைவருக்கும் சுகம்.
ReplyDelete