Header Ads



இப்படியும் ஒரு ஆசிரியர் - தேடிச்சென்று வாழ்த்திய மாணவர்கள்


திருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்றைய தினம் (06-10-2023) ஆசிரியர்தினம் என்பதால், ஆசிரியர் நாளாந்தம் பயணித்து பாடசாலைக்கு வரும் இழுவைப் பாதை படகு சேவைக்கு மாணவர்கள் சென்று மாலையிட்டு ஆசிரியரை வாழ்த்தியுள்ளனர்.


இச் சம்பவமானது குறித்த ஆசிரியரின் ஆசிரியத்துவ பணியின் மகத்தான சேவைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கின்றது.  


குறித்த மாணவர்கள் தேடிச்சென்று வாழ்த்திய சம்பவத்தையடுத்து ஆசிரியருக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.  

1 comment:

  1. ஆசிரிய - மாணவ உறவுகள் விரிசலடைந்து, மாசுபட்டுவரும் இக்கால கட்டத்தில் இந்த மாணவ மணிகளின் செயல்களை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். இந்த ஆசிரியர் அவருடைய கடமையைச் செய்ய இழு படகு மூலமாக பல ஆபத்துக்களுக்கு மத்தியில் தனது கடமையைச் செய்ய முயற்சி செய்யும் ஆசிரியரை மாணவர்கள் இனம்கண்டு அவருடைய தியாகத்தை மதித்து அவர்களை கௌரவப்படுத்தியிருக்கின்றார்கள் .இந்த நாட்டில் இந்த ஆசிரியரைப் போல இன்னும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்ய பல தியாகங்களைச் செய்கின்றார்கள்.ஆனால் துரருஷ்டவசமாக அவர்களின் தியாகங்கள் மாணவ செல்வங்களின் கண்களுக்குப்படுவதில்லை. திருகோணமலை மாணவ செல்வங்களின் முன்மாதிரியை இந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழும் மாணவச் செல்வங்களும் பின்பற்றினால் அது அவர்களின் செயல் ஆசிரியர்களுக்கு ஊக்கமளி்பபது போலவே அவர்களுக்கும் அவர்களுடைய இலக்குகளை அடைந்து கொள்ள அது பாதையை இலகுவாக்கிக் கொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.