அரச வங்கியிலிருந்து தங்கம் திருட்டு
வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 28ஆம் திகதி வங்கியின் கையிருப்பில் இருந்து தங்கம் திருடப்பட்டது.
இரவு வேளையில் வங்கிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment