Header Ads



மத நிந்தனை விவகாரம் - ஒன்றுபட்டு உழைத்தால் முஸ்லிம் சமூகம் வெற்றியீட்டலாம் என நிரூபித்த சம்பவம்


இன்று 24/10/2023 அல்லாஹ்வை அவமதித்து நிந்தனை செய்ததற்காக (CCID) கம்பியூட்டர் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 


அதன் பணிப்பாளர் உடனே  குறித்த நபரை கைது செய்வதற்காக, ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை கண்டிக்கு அனுப்பி வைத்தார். 


காலை 10:30 மணிக்கு வாக்கு மூலம் அளிக்க உள்ளே சென்ற நாம் ( Rasmin MISc  Shajeer Uswi Hasan Mohamed Rifah   ) பி.ப 3:00 மணி வரை வாக்கு மூலம் வழங்கப்பட்டது. 


பணிப்பாளரின் உடனடி நடவடிக்கை இன்னும் நாட்டில் நீதி வாழ்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 


இதற்காக எமக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய All Ceylon Jamiyyathul Ulama - ACJU  க்கும், சகோதரர் சட்டத்தரணி சிறாஸ் நூர்தீன் Shiraz Noordeen   க்கும் எமது சமூகம் சார்ந்த மனமார்ந்த நன்றிகள்.


ஹைதர் அலி

No comments

Powered by Blogger.