கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள வேண்டுகோள்
நீங்கள் சமீபத்தில் ஜேர்மனியின் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி குறித்து எங்கள் கவனம் திரும்பியுள்ளது. உயிர்த்த ஞாயிறு விடயத்தில் நீங்கள் கத்தோலிக்க ஆயர் பேரவையுடனேயே விடயங்களை கையாள்வதாகவும் கர்தினாலுடன் அவற்றைக் கையாளவில்லை எனவும் நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளீர்கள்.
கொழும்பு பேராயர் என்ற வகையில் கர்தினால் ஒரு தனிநபர் இல்லை. இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மிக முக்கிய உறுப்பினர் என்பதை சுட்டிக்காட்டவேண்டும்.இதன் காரணமாக கர்தினாலை தனித்து ஒருவராக நீங்கள் சுட்டிக்காட்டுவது கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முழுமையை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு வழங்கியமைக்காக நாங்கள் உங்களிற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
இதன் தொடர்ச்சியாக பேட்டியின் போது நீங்கள் எவ்பிஐ- பிரிட்டிஷ் பொலிஸார் மற்றும் அவுஸ்திரேலிய இந்திய சீன பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள்.
இந்த விடயம் பொதுமக்களின் கவனத்தையும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த அறிக்கைகளின் பிரதிகளை நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், என கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment