இஸ்ரேல் தான் போரை முடிக்கும், நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் - நெத்தன்யாகு
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், போர் உக்கிரம் அடைந்து வருவதுடன் காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் இராணுவம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியதுடன், உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேசமயம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறுகையில்,
இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் இதற்கு முன்னர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment