தெற்காசியாவிலே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை
இலங்கையில் உத்தேச மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமானால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் எனத் எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் அதிகூடிய மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இலங்கை தற்போது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மின் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க புதிய முறையொன்று உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment