ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி, உயருகிறது டொலர்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(31.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (31.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.50 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 354.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 405.66 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Post a Comment