Header Ads



கொடூர சட்டத்தை கொண்டுவராதே - முக்கிய சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்து



சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.


ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பில் Google, Meta (Facebook, Instagram, WhatsApp, Threads), Amazon, Apple, Booking.com, Expedia Group, Goto, Grab, Line, LinkedIn, Rakuten, Spotify, Snap, Shopify, X (Twitter) மற்றும் Yahoo ஆகிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.


உத்தேச சட்டமூலம், இலங்கையர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வௌிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை தடுக்கும் கொடூரமான சட்டமாகும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எமது உறுப்பினர்களின் சேவைகளை பயன்படுத்துவோரது பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளதுடன் சட்டங்கள் ஊடாக புத்தாக்கங்கள் மூழ்கடிக்கப்படக் கூடாது. இந்த துறைசார்ந்த அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட்டு நீதியான, சர்வதேச தரங்களுக்கு அமைவான மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதிமுறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.


No comments

Powered by Blogger.