Header Ads



பலஸ்த்தீனியர்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குகிறோம் - ஹமாஸ் தலைவரிடம் மலேசிய பிரதமர் உறுதியளிப்பு


பாலத்தீன மக்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவிடம் கூறியதாக மலேசிய பிரதமர் இப்ராஹிம் அன்வர் தெரிவித்துள்ளார்.


ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இப்ராஹிம் கூறினார்.


"காஸாவின் மோசமான சூழ்நிலையில், குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்தவும், ரஃபாவில் ஒரு மனிதாபிமான வழித்தடத்தை நிறுவவும் நான் வலுவாக வாதிடுகிறேன்," என்று எக்ஸ் வலைத்தளத்தில் இப்ராஹிம் பதிவிட்டார்.


"இஸ்ரேல், தங்கள் ஆக்கிரமிப்பு அரசியலை கடைப்பிடிப்பதை கைவிடுவதும், ஹமாஸுடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதும், நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு முடிவுகட்ட ஒரு அமைதியான உடன்பாட்டை உண்மையாக பின்பற்றுவதும் கட்டாயமாகும்." என்று அவர் கூறினார்.


"மனிதாபிமான உதவிகளை வழங்குவற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு மற்றும் மருந்து வடிவில் தேவைப்படுபவர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்"

No comments

Powered by Blogger.