Header Ads



நான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன்


நான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியின் முன்னோக்கி செல்லும் பாதையில் செல்ல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.


நீண்ட காலமாக இலங்கை அரசியலில் முக்கிய பங்கை வகித்த மகிந்த ராஜபக்ஸ, அரசியல் களத்திற்கு பங்களிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.


எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்தை மகிந்த ராஜபக்ஸ வெளிப்படுத்தியிருந்தார்.


இருப்பினும், கடந்த வாரம், மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. நன்றாக தொடர்ந்தும் ஈடுபடுங்கள். மரணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதற்கு இன்னும் போதிய காலமிருக்கின்றது. மற்றுமொரு ஈஸ்டர் ஞாயிறு அல்லது ஒரு திகன அல்லது தர்காடவுன் படுகொலையைத் திட்டமிட்டுச் செயற்படுத்தினால் பொஹோட்டுவ இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆட்சி செய்யும். International Mandicant என நீங்கள் சர்வதேச மட்டத்தில் பிரஸ்தாபிதத்துள்ளதால் இதன்பிறகு கடன் எடுத்துக் கொண்டே இருக்கலாம், திருப்பிச் செலுத்த அவசியமில்லை. இலங்கையின் பெயர் உலகப்படத்திலிருந்து நீக்கப்படும் வரை ராஜபக்ஸாக்கள் கொடிகட்டிப் பறக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.