விபரீத விளையாட்டால், ஒருவர் பலி
பாதுக்கை மாவத்தகம பிரதேசத்தில் விபரீதமான விளையாட்டில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு சிறிய குளமொன்றில் நீராடி கொண்டிருக்கையில் , அதிக நேரம் நீருக்கடியில் மூச்சை இழுத்து பிடிக்க கூடிய நபரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
அந்த போட்டியின் போது, மூச்சு இழுத்து பிடித்து தண்ணீருக்குள் சென்ற ஒருவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் மேற்பரப்பிற்கு வராததால், ஏனையவர்கள் அவரை மீட்டுள்ளனர்.
பின்னர் குறித்த நபரை உடனடியாக பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னானை பகுதியைச் 47 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாதுக்கை மரண பரிசோதகர் கலாநிதி நந்தசேன பன்னிபிட்டிய நடத்த உள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment