இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பகிரங்கப்படுத்துவோம்
காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், 40 இஸ்ரேலியக் குழந்தைகளை கழுத்து அறுத்து படுகொலை செய்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் பச்சைப் பொய்யை எழுதின.
எனினும் கடந்த 5 நாட்களாக அராஜக இஸ்ரேலின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீன குழந்தைகள் குறித்தோ அல்லது இஸ்ரேலிய தாக்குதல்களின் தகர்க்கப்பட்ட, பள்ளிவாசல்கள் பற்றிய குறித்த ஊடகங்கள் எந்த செய்தியைiயும் வெளியிடவில்லை.
இப்போது புரிகிறதா, உண்மையான, விலை போகாத, ஜப்னா முஸ்லிம் இணையம் போன்ற முஸ்லிம் சார்பு ஊடகங்கள் ஏன், முஸ்லிம் சார்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன என்று..?
சில முஸ்லிம்களினால் நடத்தப்படும் ஆங்கில இணையங்கள கூட, பலஸ்தீனர்கள் பற்றி எழுதினால், சிங்கள மக்கள் கோபமடைந்து விடுவார்களோ என்ற நினைப்பில் ஒதுங்கியிருக்கின்றன
முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்களை வெளிக்கொண்டு பிரச்சாரப்படுத்துவதிலும், அந்த அக்கிரமங்களில் இருந்து விடுபட, பிரார்த்தனைகளை ஊக்குவிக்கும், ஜனநாயகத்தை நேசிக்கும் ஒரு ஊடகமான ஜப்னா முஸ்லிம் இணையம், இறைவன் உதவியுடன் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பகிரங்கப்படுத்தும்.
Post a Comment