முஸ்லிம் உறவுகளே, கல் எளிய அரபுக் கல்லூரியை மறந்து விட்டீர்களா..? அநியாயங்களை தட்டிக்கேட்க மட்டீர்களா..??
இஸ்லாமிய உறவுகளே....! உங்களைத்தான்....!
64 வருட வரலாற்றைக் கொண்ட கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரிக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களை இல்லாமற் செய்யத் துடிக்கும் இவர்களைத் தட்டிக் கேட்க மாட்டீர்களா ?
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி 1959 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் மாணவிகளுக்கான முதல் அரபுக் கல்லூரி இதுவாகும்.
1962 ஆம் ஆண்டு அனாதை இல்லம் இங்கு ஸ்தாபிக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அது ஒரு தர்மஸ்தாபனமாகப் பதியப்பட்டது.
1973 ஆம் ஆண்டு குழந்தைகள் பராமரிப்பகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, எமது சமூகத்துக் குழந்தைகள் , சிறார்கள் அந்நிய அனாதை இல்லங்களுக்கு
சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து எஸ். எஸ். சி பரீட்சைக்கும் பின்னர் க. பொ. த (சா/த) பரீட்சைக்கும் பாடசாலைப்
பரீட்சார்த்திகளா கவே விண்ணப் பித்தனர். அவ்வாறே, அல் ஆலிம் ஆரம்ப, இறுதி பரீட்சைகளுக்கும் க.பொ.த.ப.(உ.த)பரீட்சைக்கும் பாடசாலை விண்ணப்பதாரிகளாகவே விண்ணப்பிப்பதற்கான அங்கீகாரம் கிடைத்திருந்தது.
1981 முதல் இலவச பாடநூல்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனாதை இல்ல மாணவிகள் தோற்றியுள்ளனர்.
1984 ஆம் ஆண்டு முதல் குவைத்தில் உள்ள பைத்துஸ் ஸகாத் நிறுவனத்தினால் அனாதை மாணவிகள் பொறுப்பேற்கப்பட்டுப் பராமரிக்கப் பட்டனர்.
அதற்குச் சிலவருட ங்களுக்குப் பின் சுமார் 100 மாணவிகள் தங்கக்கூடியவாறு பைத்துஸ் ஸகாத் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
அதன் பின் வெளிவாரியான அனாதை மாணவிகளும் இந்த உதவித்திட்டதில் உள்வாங்கப்பட்டு நிறுவனத்தின் உதவியைப் பெற்றுவருகின்றனர்.
கல்லூரியில் கடமையாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்,N.I.E இல் PGDE பயிற்சி நெறியை மேற்கொள்கின்றனர்.
சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களத்தினால் அன்று இவ்வனாதையில்லத்தில் சேர்க்கப்பட்டோ ரிடமும் ,குவைத் ஸகாத் நிறுவனத்தால் அனுமதிக்கப்படுவோரிடமும் எவ்விதக் கல்வித்தகைமையோ வயதுக்கட்டுப்பாடோ எதிர்பார்க்கப்படவில்லை.
ஆனால் இப்போது அவர்கள் 12 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும் 6ம் தரம் சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் பார்க்கப்படுகின்றன.
இதன் காரணமாக இவ்வனாதையில்லத்தில் சேரும் வாய்ப்புகளை, அரச கார்யாலங்கள் மூலமும், ஸகாத் நிறுவனம் குறிப்பிடும் நிபந்தனைகள் மூலமும் பெற்றிருப்பினும் இங்கு சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர்.
இந்தக் கல்லூரியை ஸ்தாபித்த,சமூகப் பற்றுக் கொண்ட அந்த ஸ்தாபகர்கள் தியாக சிந்தையுடனும், பொதுநல வேட்கையுடனும் பல்லாண்டு காலம் இது வாழ்ந்து வளர்ந்து சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதற்காகப் பெற்றுத்தந்த இந்த வரப்பிர சாதங்களையெல் லாம்,கேவலம் அதன் வளங்களைத் தாமும் தமது குடும்ப உறுப்பினர்ளும் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு சுயநலத் தேவைக்காக, இல்லாமற் செய்ய பல லட்சங்களை வாரியிறைத்து அல்லும் பகலும் முயற்சி செய்கின்றனர் சிலர்.
ஈமானிய நெஞ்சங்களே...!
இந்த நிலையிலிருந்து இக்கல்லூரியைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஒன்றும் செய்யமாட்டீர்களா?
இங்கே என்ன நடக்கிறது என்பதைத் தேடிப் பார்க்க மாட்டீர்களா?
அனாதைகளை ஆதரிக்க வேண்டிய இடத்தில் அனாதைகள் அநாதரவாக்கப்படும் அவலத்தை தட்டிக் கேட்கமாட்டீர்களா?
பெண்களுக்கு அறபு மொழியும் மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியும் போதிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரியில்,அறபுமொழி ஷரீஆக்கல்வி புறக்கனிக்கப்படும் அநியாயத்தை தடுப்பதற்கு முயற்சி செய்யக்கூடாதா?
ஒரு பொதுச் சொத்தை தனியார் சொத்தாக மாற்றத் துடிக்கும் அக்கிரமத்தை நீங்கள் எல்லோரும் அனுமதிக்கப் போகிறீர்களா?
தங்கள் சொந்த நலனுக்காக, கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்ட பலநூறு பிள்ளைகளின் கல்வி,பண்பாடு,பாதுகாப்பு,ஆரோக்கியம் என்பவற்றைக் கவனிக்காத, தமக்கு ஆதரவானவர்களைச் சேர்த்துக் கொள்ளவும், தாம் விரும்பாதவர்களை,அல்லது தமக்கு ஆதரவு வழங்காதவர்களை இழுத்து வெளியே தள்ளவும் பகீரதப் பிரயத்தனம் செய்யும் அதிகாரிகளுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீர்களா?
எங்கள் தனித்துவங்கள், எங்களுக்குச் சொந்தமானவைகள் ஒவ்வொன்றாக இல்லாமலாக்கப் படுவதை, மௌனமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தால் "உனக்கு நான் வழங்கிய அருள்களைக் கொண்டு என்ன செய்தாய் ?"என அல்லாஹ் கேட்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு இதற்குப் பதில் சொல்லுங்கள்.
கள்-எலிய மு.ம.அ.கல்லூரி
பழைய மாணவிகள் அமைப்பு
(றாபிததுஸ் ஸய்யிதாத்)
Post a Comment