Header Ads



இந்த கிழடனின் அபாயகரமான வார்த்தைகள்


இஸ்ரேலின் மூத்த இராணுவ வீரர் ஒருவர் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேலியரான 95 வயதான முன்னாள் இராணுவ வீரர் Ezra Yachin என்பவர், காஸா பகுதிக்குள் நுழைந்து சிறார்கள் உட்பட மொத்த குடும்பங்களையும் கொன்று விடுங்கள் என அந்த காணொளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.


இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காக பணியாற்ற தயார் என்பவர்கள் பட்டியலில் இருபத்துடன் சக இராணுவ வீரர்களிடம், அந்த மிருகங்களை வாழ விடாதீர்கள் என கொந்தளித்துள்ளார்.


காஸா பகுதிக்குள் நுழைந்து மிக விரைவாக முடித்து விடுங்கள், அவர்களின் நினைவு கூட மிஞ்ச வேண்டாம். நாளை ஹிஸ்புல்லா அமைப்பு போரில் இணைந்து நம் மீது வான் தாக்குதலை தொடுக்கலாம்.


சுற்றுவட்டாரத்தில் உள்ள அரேபிய நாடுகள் ஒன்று திரண்டு நமக்கெதிராக திரும்பலாம். அதனால் எந்த சாக்குப்போக்கும் வேண்டாம், இப்போதே புறப்படுங்கள், உங்களுக்கு அரேபியர் ஒருவர் அண்டைவீட்டாராக இருந்தால், அவர் உங்கள் வீட்டுக்கு புகுந்து தாக்கும் வரையில் காத்திருக்க வேண்டாம்.


முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் தயாராகி இருக்கிறோம், இனி முடிவு காணாமல் வெளியேறுவதாக இல்லை. அரேபியர்களின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை தொடங்குங்கள் எனவும் அந்த முன்னாள் இராணுவ வீரர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


அவரது இந்த காணொளி முக்கிய ஊடகங்களில் வெளியானதுடன், மக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

No comments

Powered by Blogger.