பெருந்துயரத்தைத் தந்த உஹது போர் முடிந்த பின், நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த பிரார்த்தனை...
உஹது போர்...
முஸ்லிம்களுக்கு பெருந்துயரத்தைத் தந்த உஹது போர் முடிந்த பின் நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த பிரார்த்தனை...
அல்லாஹ்வே !
புகழனைத்தும் உனக்கே உரித்தானது...
நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை.
நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை...
நீ வழிகேட்டில் விட்டவருக்கு,
நேர்வழி காட்டுபவர் யாருமில்லை...
நீ நேர்வழி காட்டியவரை,
வழி கெடுப்பவர் யாரும் இல்லை...
நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை.
நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை...
நீ நெருக்கமாக்கி வைத்ததை, தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை...
அல்லாஹ்வே !
உன் வளங்கள்,
உன் கருணை,
உன் கிருபை,
நீ வழங்கும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை நீ எங்களுக்கு
விசாலமாக வழங்குவாயாக...
அல்லாஹ்வே !
நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் வேண்டுகின்றேன்...
அல்லாஹ்வே !
சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் வேண்டுகின்றேன்...
அல்லாஹ்வே !
நீ எங்களுக்குக் கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்...
எங்களுக்கு ஈமானை பிரியமாக்கி வைப்பாயாக !
அதை எங்கள் உள்ளங்களில் அலங்கரித்து வைப்பாயாக !
இறை நிராகரிப்பு, உன் கட்டளைக்கு மாறுசெய்வது, உனக்கு கட்டுப்படாமல் விலகிப் போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடுவாயாக !
எங்களை பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிடுவாயாக !
அல்லாஹ்வே !
எங்களை முஸ்லிமாக
மரணிக்க வைப்பாயாக !
முஸ்லிம்களாக எங்களை
வாழச் செய்வாயாக !
நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகதவர்களாக
எங்களை நல்லோருடன் சேர்த்து வைப்பாயாக !
அல்லாஹ்வே !
உன் தூதர்களைப் பொய்யாக்கி,
உன் வழியில் இருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடுவாயாக.
அவர்கள் மீது உன் தண்டனையையும், வேதனையையும் இறக்குவாயாக !
அல்லாஹ்வே !
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு
உண்மையான ஏக இறைவனே...
- அல்அதபுல் முஃப்ரத்,
முஸ்னது அஹ்மது.
Post a Comment