இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்க சவூதி முன்வந்தது, அது நடக்க கூடாது என்பதற்காகவே ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது - பைடன்
சுமார் 75 வருடங்களுக்கு முன் தனி நாடாக உருவான இஸ்ரேலை பல அரபு நாடுகள், ஒரு நாடாக அங்கீகரிக்காமல் இருந்தன.அவற்றில் சவுதி அரேபியாவும் ஒன்று எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவில்லை. ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன.
இந்த இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த போது, சவுதி அரேபியாவுடன் அமெரிக்க ஜனாதிபதியின் தலைமையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.
பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலையை சவுதி அரேபியா எடுத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மீண்டும் உறவு நலிவடைய தொடங்கி விட்டது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு காரணம், சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட கூடாது என ஹமாஸ் எண்ணியமையாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்கவும் முன் வந்தது.
ஆனால் வரலாறு காணாத அத்தகைய நிகழ்வு நடக்க கூடாது என ஹமாஸ் விரும்புகிறமையாலேயே திடீர் தாக்குதலை நடத்தியது” என பைடன் கூறியுள்ளார்.
Post a Comment