படிப்பை நிறுத்திவிட்டு தொழிலுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்வதை ஆண் மாணவர்கள் நிறுத்த வேண்டும்
இலங்கையில் உள்ள பல்கலைக்கழககங்களில் 75 வீதமான உயர்கல்விக்காக பெண் மாணவர்கள் மட்டுமே தற்பொழுது கல்வி கற்று வருகின்றனர். அகதியா நிறுவனம் இவ்விடயத்தில் பெரிதும் கவனம் செலுத்தி ஆண் மாணவர்களை உயர் கல்வி பயில்வதற்கு நாடாளரீதியில் ஊக்கப்படுத்தப்படுத்துதல் வேண்டும். என வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றி அங்கு தெரிவித்தாா்.
அவர் அங்கு தொடார்ந்து உரையாற்றுகையில்,
அனேகமான ஆண் மாணவர்கள் தமது கல்வியை க.பொ.த. சா.த. மற்றும் உயர்தரத்தில் நிறுத்தி வியாபாரத்திலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும்் சென்று விடுகின்றனர். இதனை முற்றாக மாற்றுதல் வேண்டும். பங்களதேசில் இதே போன்று ஒரு என்.ஜி.ஓ அங்குள்ள ஆண்மாணவர்களை விழிப்பூட்டி அங்கு 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்மாணவர்கள் தற்பொழுது கனனி மற்றும் உயர்கல்வி பயின்று வெளியேறி உள்ளனர். என வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி அங்கு உரையாற்றினார்
களுத்துறை மாவட்ட அகதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் 22ஆவது ஆண்டுவிழாவும் மாணவர்களது பரிசலிப்பு மற்றும் மேடை நிகழ்ச்சிகளும் பாணந்துறை அம்பலாந்துவ இல்மா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் 07.10.2023 நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்றி, மற்றும் பௌத்தம் மற்றும் மத கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாய்க்க பாராளுமன்ற உறுப்பிணர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், மர்ஜான் பளீல், மலேசியா நாட்டின் உயர் ஸ்தாணிகர் பதி ஹசாம் அடம் கலந்து கொண்டனர்
அத்துடன் அகதியா சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ எம்.ஆர்.எம். சருக், களுத்துறை மாவட்ட அகதியா சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.எம். உவைன், செயலாளர் ஹிசான் சுகையில் மற்றும் சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள 13க்கும் மேற்பட்ட அகதியா பாடசாலை மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment