Header Ads



மைத்திரிகமவில் நெகிழ்ச்சியான சம்பவம்


வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.


இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது.

சம்பவதினமான நேற்று இரவு யானை மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவருகின்றது.


இந்நிலையில் அடிபட்ட யானை அருகில், வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றதாகவும் கூறப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.