Header Ads



அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள் - கல்வியமைச்சு முன் சோகம்


பெலவத்தை பாலம் துனா சந்திக்கு அருகில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலம்துன சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, ​​பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.


இதன் காரணமாக பொரளை-கொட்டாவ வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து தடைபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆசிரியர்களை கண்ணியப்படுத்த வேண்டிய சமூகம் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க வரும் போது அவர்களுக்கு கண்ணீர் புகை அடிக்கும் அடாவடித்தனம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக கட்டளையிட்டவர்களும் மேலுள்ள அதிகாரிகளும் மிக விரைவில் அதன் விளைவை நிச்சியமாக அனுபவி்க்கப் போகின்றார்கள். ஐப்பானில் ஆசிரியர்கள் ஒரு காரியாலயத்துக்குச் சென்றால் அவர்களை அங்குள்ள அதிகாரிகள் எழுந்து நின்று அவர்களுடைய பணியை உடன் முடித்து அனுப்பிவைப்பார்கள், அதே போல ஏதாவது குற்றச் சாட்டுக்களுக்கு ஜப்பான், பிரான்ஸில் ஆசிரியர்களை கைது செய்ய கல்வி அமைச்சின் அனுமதியின் முன் அனுமதி பெறப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.