Header Ads



தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு

 
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைவாக தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அடையாள அட்டையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.


Online ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 25 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 500 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அடையாள அட்டைகளுக்கான புகைப்படக்கலைஞராக பதிவு செய்வதற்கு இதுவரை அறவிடப்பட்ட 10,000 ரூபா கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பதிவுகளை புதுப்பிப்பதற்கான 2000 ரூபா கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.