பள்ளிவாசலுக்கு முன், மரம் நிற்பது பாவமா..? முஸ்லிம்களின் வரலாற்றை அழிக்க முயற்சி
- Raazi Mohamed -
மட்டக்களப்பின் மான்மியத்தை சொல்லும் மரமது.சுமார் 350 வருடமாக அந்தவாகை மரம் வானுயர்ந்து நின்றிருந்தது. எத்தனை வரலாறுகளை அதுகண்டிருக்கும்.எத்தனை இரத்தங்களையும் கண்ணீரையும் அதுகண்டிருக்கும். அந்த வாகை மரம் வாழும் ஒரு வரலாறு.
மாலைக் கருக்கலில் அவ்வீதியில் செல்லும் எல்லோரையும் அதன் கொப்புகளில் கூடு கட்டி வாழும்எத்தனையோ ஆயிரம் பச்சைக் கிளிகளின் பண்ணோசை வரவேற்கும்.எத்தனையோ பறவைகளின் வாசஸ்தலம்அந்த மரம்.
அப்படிப்பட்ட அந்த மரம் செய்த ஒரே ஒரு பாவம் பள்ளிவாசலுக்கு முன் நின்றதுதான். மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது இந்த மரம். 1921ம் ஆண்டைய வரைபடத்தில் பள்ளி வளாகத்திற்குள் அது நிற்கிறது.எத்தனையோ முறை அவர்களும் சொல்லிப்பார்த்துவிட்டார்கள் மரத்தையாவது வாழ விடுங்கள் என்று.
சென்ற திங்கட்கிழமை 16ம் திகதி அந்த மரத்தை அடியோடு அறுத்து வீழ்த்தினார்கள் மட்டக்களப்பு மரக்கூட்டுத்தாபனஊழியர்கள். அதனை முழுமையாக வெட்டி வீழ்த்த அனுமதி வழங்கியவர் மட்டக்களப்பு பிரதேசசெயலாளர்.மரத்தின் ஒரு கிளையில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.அனர்த்த முகாமைத்துவ உ த்தியோகத்தர் மரத்தின் கிளையை மாத்திரம் வெட்டினால் போதும் அடியை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியும் கூட அதனை அடியோடு வெட்டி வீழ்த்தி விட்டார்கள்.
சுமார் 350 வருடமாக நின்றிருக்கும் அந்த மரத்தை இதுவரைக்கும் பரிபாலித்து வந்தவர்கள் பள்ளிநிர்வாகத்தினர்.அதனைச் சுற்றி கற்களால் ஆன அரண் ஒன்றையும் அமைத்திருந்தார்கள். பள்ளியின் 1921 ஆண்டைய வரைபடத்தில் பள்ளி வளாகத்திற்குள் மரம் இருக்கிறது. மரம் இருக்கும் பிரதேசம் பள்ளிவாசலுக்குச்சொந்தமானது.நூற்றாண்டுகளுக்கு முன்னர் பக்கீர் பாவா என்ற ஒரு ஞானி அம்மரத்தின் கீழ் இருந்து தியானம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.
குறிப்பிட்ட மரம் மட்டக்களப்பின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது. தெரிந்து கொண்டுதான் அதன் அடியை அறுத்தார்கள்.
350 ஆண்டுகள் பழையானது. அதுவும் அவர்களைத் தடுக்கவில்லை.
எத்தனையோ பேருக்கு நிழலைத் தந்தது. அவர்கள் நிறுத்தவில்லை.
மாலை நேரமானால் கிளிகளின் சரணாலயம் அதன் கிளைகள். வெட்டியபின்னர் அதில் வாழ்ந்து ஆந்தை ஒன்று ஒவ்வொரு நாளும் அவ்விடத்திற்கு வந்து போகிறது. இதைச் சொல்லி ஒருவர் அழுதுவிட்டார்.
ஏன் இந்த வக்கிரம் என்று தெரியவில்லை. மரங்களைக் காக்க வேண்டும். சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று பலர் கோஷமிடுகிறார்கள். பச்சைகள் இல்லாமல் இந்தப் பூமி பாழாப் போகிறது என்கிறார்கள். ஆனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரத்தை அடியோடு அறுத்தெறிகிறார்கள்.அதன் உச்சியில் ஏறி பெற்றோலில் நனைக்கப்பட்ட சாக்குகளை வீசி நெருப்புக் கொடுத்திருக்கின்றார்கள்.
இன்று அதன் வேர் மட்டும் அனாதையாய்க் கிடக்கிறது. அது அவர்களை இடிக்கிறது. அதனையும் அகற்றப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது வீதி அபிவிருத்தி அதிகார சபை. வேரை அகற்றப்போவதாக பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் அதன் பொறியியலாளர் சிவகுமார்.
இப்போது இறுதியில் எஞ்சி இருப்பது அந்த மரத்தின் வேர்தான். அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அந்த வேரும் அகற்றபடுமானால் நிலங்கள் போய்விடும்.
அனைத்தும் அரசியல். அரசியலின் எச்ச சொச்சங்கக் இயற்கையைக் கூட விட்டபாடில்லை.
குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக இத்த அத்து மீறலைச் செய்த அனைவருக்குமெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment