Header Ads



ரணிலும், பசிலும் மேற்கொண்டுள்ள முயற்சி - அம்பலப்படுத்தும் அநுரகுமார


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் மீது பேராசை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச போன்றோர் அதிகாரத்திற்காக அந்த பதவியை ஒழிக்க தயாராகி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


தம்மிடம் இருக்கும் பொறுமதியான ஒன்றென அவர்கள் இதுவரை காலமும் நிறைவெற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை பாதுகாத்தனர் என்பதை முழு நாடும் அறியும்.


அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் அவர்களின் இறுதி துரும்புச்சீட்டு நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது.


ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை பாதுகாக்க இறுதி அஸ்திரத்தை கையில் எடுக்க தயாராகி வருகிறார்.


அதுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் இருக்கின்றது.


எனினும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை இருக்கும்.


அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருக்காது.


பாராளுமன்றத்தின் அதிகாரம் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை அவர்களிடம் இருக்கின்றது.


அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டுக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தை 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை நீடித்துக்கொள்ளலாம் என ரணில மற்றும் ராஜபக்சவினர் நினைக்கின்றனர்.


இவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பொய்யாக குரல் கொடுத்தனர்.


மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை பலவீனப்படுத்தும் 19 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார்.


அதன் பின்னர், அந்த பதவியை பலப்படுத்தும் 18வது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார்.


இதன் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் அதிகரிக்க 20 வது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் திடீரென இவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.


அதிகாரத்தை தக்கவைக்க இறுதி வரை எப்படியெல்லாம் முயற்சி செய்கின்றனர் பாருங்கள் என அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.