Header Ads



தாம்பத்திய வாழ்வில் தோல்வி கண்ட, மிகப் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டீன்

 


சென்ற நூற்றாண்டு கண்ட மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்பது உங்களுக்கு தெரியும்! 

ஆனால்  அவரது திருமண வாழ்வு மிகவும் துர்க்கதியானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆரம்பத்தில் அவரது மனைவி  மிலோவாவுடனான குடும்ப வாழ்வு இன்பகரமாகத்தான் இருந்தது. போகப் போக பரஸ்பர காதல் குறைய ஆரம்பித்தது, கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன, ஒரே வீட்டில் இருந்தும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர், இப்படியே தொடர் பிரச்சினைக்குப் பிறகு கடைசியாக விவாகரத்தில் முடிந்தது.


விவாகரத்துக்கான செட்டில்மென்டாக அவருக்கு கிடைத்த நோபல் பரிசால் பெருந் தொகையை அவளுக்காக அவர் செலுத்த நேர்ந்தார்.


மிகப் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டீன் நவீன இயற்பியலை நிறுவுவதில் வெற்றி கண்டார். ஆனால் சாதாரண தாம்பத்திய வாழ்வில் தோல்வி கண்டார்.


உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக இருந்தால் நீங்கள் ஐன்ஸ்டீனை விட பெரிய சாதனையாளர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!


ஏனெனில் ஐன்ஸ்டீன் நிறுவிய இயற்பியல் கலையை விட தாம்பத்திய வாழ்வென்பது மிகவும் கடினமான ஒரு கலை. நீங்கள் தோல்வி கண்டிருந்தால் கூட சஞ்சலப்பட வேண்டாம். ஏனெனில் ஐன்ஸ்டீன் போன்ற பெரிய விஞ்ஞானிகளே  தோல்வி கண்டுள்ளனர். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.