ஒரு ஆன்மாவின் சுய சரிதை
நான் பல மில்லியன் கணக்கானவர்களுடன் பித்துப் பிடித்தவன் போல் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டாம்பிடிக்க ஆரம்பித்தேன். யார் முதலிடம் பிடிப்பது..? யார் ஜெயிப்பது..? என்பதே எல்லோரின் அவாவாக இருந்தது.
ஒரு மாதிரியாக நான் முதலிடம் பெற்றேன். உள்ளே நுழைந்து இடம் பிடித்துக் கொண்டேன். 9 மாதங்கள் தனியாக சகல வசதிகளுடனும் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.
பிறகு ஒரு நாள் கருவறை என்னை வெளியே தள்ளிவிட்டது. வந்ததும் வந்தேன், அழுது கொண்டே வந்தேன். நிம்மதியாக இருந்த என்னை இப்படி தள்ளிவிட்டால் அழாமல் என்ன செய்வேன்..?
இப்படி இருக்க ஒரு நாள் கல்லறை என்னை விழுங்கிக் கொண்டது. இப்போது நான் மீண்டும் தனியாளாக மாறிவிட்டேன். நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன், பல மில்லியன் கணக்கானவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர்.
தமிழாக்கம் / imran farook
Post a Comment