இரவு நேரத்தில் கல்வீச்சு - நீர்கொழும்பில் நடப்பது என்ன..?
- Ismathul Rahuman -
போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக செயல்பட்ட மக்களை பொலிஸார் தாக்கியதாக மக்களும் தேவஸ்தான பங்குத் தந்தையும் குற்றச்சாட்டுகின்றனர்.
தாக்குதல் நடித்திய பொலிஸாருக்கு எதிராக மக்கள் கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்திற்கு முன்பாக இன்று 9ம் திகதி காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தான பங்குத் தந்தையும் அங்கு வருகை தந்தார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது
நீர்கொழும்பு, கடற்கரை தெரு, மீனவகிராம மக்கள் தமது கிராம வாலிபர்கள், இளம்பெண்கள், பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகுவதனால் அவர்களை பாதுகாக்க போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்கள்.
இதன் ஒரு கட்டமாக கடந்த 17 ம் திகதி மீனவ கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் என அனைவர்களும் ஒன்றுசேர்ந்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் சென்று தமது கிராமத்தை போதையிலிருந்து பாதுகாத்துத் தருமாறு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடம் கோரிக்கைவிடுத்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தலைமை பொலிஸ் அதிகாரி உரிய நடவடிக்க எடுப்பதாக வாக்குறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தார்.
இவ்வாறான நிலைமையில் குறித்த மீனவ கிராமத்தில் இரவு நேரத்தில் வீடுகளுக்கு கற்களால் அடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தான பங்குத் தந்தை கயான் பிரசாத் பெரேரா பிதா சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் கிராமமக்கள் போதைப் பொருள் வியாபாரத்திற்கு எதிராக செயல்பட்டு அவர்களை நீதியின் முன் கொண்டுசெல்ல முயற்சித்தனர். இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பும் கிடைத்தது.
இவ்வாறான நிலமையில்தான் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அடிவருடிகளைக்கொண்டு போதைக்கு எதிராக செயல்படுபவர்களின் வீடுகளுக்கு இரவில் கல் எறிய ஆரம்பித்தனர். தொடராக அதனை செய்தனர்.
கற்களை அடிப்பவர்களை கண்டறிவதற்காக மக்கள் இரவு நேரங்களில் விழித்திருந்து வேவுபார்த்தனர்.
8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லெறியும் போது மக்கள் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர் குறித்த நபர் அந்த வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் வருகைதந்து கற்களை எறிந்தவர் ஓடிச்சென்ற வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு கற்கள் அடங்கிய பேக் ஒன்றும் காணப்பட்டன. அவர்களை எச்சரித்த பொலிஸார் கல்பேக்கை எடுத்துக்கொண்டு சென்றனர்.
மீண்டும் குறித்த வீட்டார் கிராம மக்களுக்கு தூசன வார்த்தைகளால் ஏசி தேவையில்லாத பிரச்சிணையை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் பொலிஸாருக்கு அறிவிக்வே பொலிஸார் வந்து இந்த அப்பாவி மக்களை தாக்கியுள்ளனர்.
அங்குதான் பிரச்சிணை உள்ளது எனக் கூறிய பிதா இது யாருடைய அதிகாரத்துடன் செய்தது. அப்படி செய்வது குற்றம் புரிந்தவர்களை பாதுகாக்கவா எனக் கேள்வி எழுப்பினார். கத்தோலிக்க பிதா தொடர்ந்து கூறுகையில்,
அப்பாவி மக்களை தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்.இதற்கு சாதாரண தீர்வை எதிர்பார்க்கிறோம். மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராகவே செல்பட்டார்கள். அதனால்தான் கல் எறியும் சம்பவம் நடைபெற்றது.
பொலிஸார் எல்லோரும் ஒன்றுபோல் இல்லையென பொலிஸ் அதிகாரிகளே கூறுகின்றனர். பொலிஸிலுள்ள அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்பவர்களும் போதைப்பொருள் வியாபாரத்திற்கு ஒத்துழைக்கும் பொலிஸில் உள்ள குழுவினர் இந்த மக்களை தாக்கி இருப்பார்கள் என தெரிவித்தார்.
ஆர்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் கருத்துக் கூறும்போது தாக்குவதற்கு வந்த பொலிஸாரில் சிலர் சிவில் உடையிலும் மற்றும் சிலர் சீறுடையிலும் இருந்தனர். மது போதையில் இருந்ததையும் அவதானிக்க முடிந்ததன. இந்த பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் பாதுகாக்கவே முன்வந்தோம். சட்டம் நாட்டில் இல்லை. சட்டத்தை சரியாக அமுல்படுத்தவும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Post a Comment