Header Ads



மன்னிப்போம், ஆனால் மறக்க மாட்டோம்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


1990 ஆம் ஆண்டு ஒக்டோபர், மாதம் 30 ஆம் திகதி அதிகாலை சுபஹ் தொழுகையின் பின்னர் யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்திற்கு எங்களை  வருமாறு அழைத்தனர். அந்த நேரத்திலே எங்களுக்கு  என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மிகுந்த பயத்துடனும் சோகத்துடனும்  சென்றோம் ஜின்னா மைதானம் சோக மயமாக இருண்ட மயமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் பாசிச விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இருக்கின்றவர்கள் ஆயுதத்தை ஏந்தி தலைவரின் உத்தரவு நீங்கள்  இரண்டு மணி நேரத்தில் இங்கிருந்து  வெளியேற வேண்டும் என்று சொன்னார்கள் 


எனவே வாழ்ந்த மண் வளர்ந்த மண் வெளியேற்றப்பட்ட   அந்த சோக கதை என்பது யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்  தடுத்து வைக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக பல தாய்மார்கள் கோரிக்கை முன்வைத்தனர் இருந்த பொழுதிலும் அவசரமாக நீங்கள் வெளியேற வேண்டும் என்று உருக்கமாக ஆணித்தரமான முறையிலே ஆயுதங்களை கையில் ஏந்திச் சொன்னார்கள். அதற்குப் பிறகு யாரும் உள்ளிருந்து வெளியேறாத வகையில் வேலைகள் செய்யப்பட்டது எனவே ஜின்னா வீதி ஆசாத் வீதி ஐந்து சந்தி  அந்த இடங்களுக்கு நாங்கள் வருகின்ற பொழுது  ஈவிரக்கமற்ற பாசிசப் விடுதலைப் புலிகள் எங்களுடைய பணங்களை சூறையாடினர் சொத்துக்களை பறித்தனர் நகைகளை கொள்ளையடித்தனர்.  


உடுத்த உடையுடன் அடுத்த உடை இன்றி  ஆடு மாடுகளையும் விட   மோசமாக நாங்கள் லொறிகளில் ஏற்றப்பட்டு பல துன்பங்க்கு துயரங்க்கு இன்னல்க்கு வலிகளுக்கு மத்தியில் ஒவ்வொருவரும் புத்தளம் என்றும் பாணந் துறை என்றும் நீர்கொழும்பு என்றும் கொழும்பு என்றும் வாழ்க்கைச் சக்கரம் போக ஆரம்பித்தது 33வருடங்களாக ஆகியும் அந்த   நேரத்தில் நாங்கள் பட்ட  இன்னல்களும் அகதி வாழ்க்கையின்  அவலங்களை  நினைத்து பார்க்கையில் இன்னும் மனம் குமுருகின்றது 


33 வருடங்களாக மாறியும் புத்தளம் , நீர்கொழும்பு,கொழும்பு,பாணந்துறை  பகுதிகளை சேர்ந்த குறிப்பாக புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த எங்களுக்கு உதவிய   நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம்களை  இந்த நேரத்தில் நாங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியவேண்டும் இருந்தாலும் கூட அசையும் சொத்து அசையா சொத்துகளை காக்க வேண்டி,


1. ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு எங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.


2.   மீள்குடியேற்றம் திட்டமிட்ட அடிப்படையில் எங்களுக்காக வேண்டி வழங்கப்பட வேண்டும் .


காலங்கள் கடந்தாலும் இந்த கருப்பு ஒக்டோபர் இந்த கரிநாள் வாழ்க்கையில் துரத்தி அடிக்கப்பட்ட விரட்டப்பட்ட  அந்த நாள் எம்மால் மறக்க முடியாது.  


புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமது முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இரண்டு மணி நேரத்தில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.


எனவே இந்த விடயத்தில், இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வட பகுதியில் வாழ்கின்ற தமிழ் சமூகம் கட்டாயமாக தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம். எனவே நாங்கள் மன்னிப்போம் ஆனால் மறக்க மாட்டோம்  நமது உள்ளங்களில் இந்த ரனங்கள் ஆழமாக பதிந்து இருக்கும் 


A.M.Abdul Malik (manbahi)


No comments

Powered by Blogger.